ஆப்நகரம்

ஆன்லைன் படிப்புகளுக்கு விரைவில் கல்விக் கடன்!

ஆன்லைன் வாயிலான படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கும் வசதி விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தப்படவுள்ளது.

Samayam Tamil 14 Jul 2020, 8:57 pm
கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் சேர்ந்து உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், கல்விக்கான செலவு அதிகமாக இருப்பதால் பலரால் தங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிவதில்லை. கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தால் மாணவர்கள் பலர் சேர முடியாமல் போவதும் படிப்பைப் பாதியில் விட்டுவிலகுதும் நடக்கிறது. இதுபோன்ற சூழலில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைப்பது பெரிதும் உதவியாக இருக்கிறது.
Samayam Tamil loan


கல்விக்கடன்கள் வழக்கமான படிப்புகளுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் ஆன்லைன் படிப்புகளுக்கு அப்படி இல்லை. தற்போது கொரோனா சமயத்தில் பள்ளிப் படிப்பைக்கூட ஆன்லைன் மூலமாகப் படிக்க நேர்ந்துள்ள இச்சமயத்தில் ஆன்லைன் வாயிலான பட்டப் படிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த வகைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் ஆன்லைன் படிப்புகளுக்கான கல்விக் கடன்கள் அமலுக்கு வரும் என்று வங்கிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களுடன் முட்டி மோதும் அம்பானி!

இதுகுறித்து இந்தியன் பேங்க் துணை நிர்வாக மேலாளரான எம்.அருணா கூறுகையில், “ஆன்லைன் மூலமான படிப்புகளுக்குக் கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்பது குறித்து வங்கி ஆலோசித்து வருகிறது. தற்போது ஆன்லைன் படிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான கல்விக் கடன் வழங்குவது தொடர்பான வழிமுறைகளையும் கொள்கைகளையும் சிறப்பாக வகுக்க வேண்டும். வழக்கமான நேரடிப் படிப்புகளை விட ஆன்லைன் படிப்புகளுக்கான கட்டணங்கள் குறைவானவே இருக்கும். ஏனெனில் நேரடிக் கல்வியில் பிராக்டிகல் வகுப்புகள் போன்றவை இருக்கும். கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து முறையான கல்விக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்தவுடன் கல்விக் கடன் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை!

ஆன்லைன் படிப்புகளுக்கான கல்விக் கட்டண நிலவரம் உள்ளிட்ட விவரங்களைப் பொறுத்தே வங்கிகளின் கல்விக் கடன் தொடர்பான விதிமுறைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் ஆன்லைன் படிப்புகளுக்கான கல்விக் கடன்கள் வழங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதலே ஆன்லைன் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக கிரேட் லேர்னிங் கல்வி நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹரி கிருஷ்ணா கூறுகிறார். ஆன்லைன் படிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான கல்விக் கடன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்