ஆப்நகரம்

டிஜிட்டல் இந்தியாவில் இனி ஏடிஎம்கள் இல்லை; படிப்படியாக மறையும் ரூபாய் நோட்டுகள்!

பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு பின், ஏடிஎம்களை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

TNN 28 Oct 2017, 1:31 pm
டெல்லி: பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு பின், ஏடிஎம்களை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Samayam Tamil banks shutter atms as cities go digital remove 358 over june aug
டிஜிட்டல் இந்தியாவில் இனி ஏடிஎம்கள் இல்லை; படிப்படியாக மறையும் ரூபாய் நோட்டுகள்!


நடப்பாண்டின் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான நாட்களில், நாடு முழுவதும் 358 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த பயன்பாட்டில் 0.16% மட்டுமே குறைவாகும். இருப்பினும் இது ரொக்கப் பண பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16.4% அளவிற்கு ஏடிஎம்கள் அதிகரித்துள்ளன.

ஆனால் கடந்த ஆண்டின் வளர்ச்சி 3.6% மட்டுமே இருந்தது. பணமதிப்பிழப்பு விவகாரம் இந்தியர்களை டிஜிட்டல் பணத்திற்கு மாற வைத்துள்ளது. இதனால் இனி ஏடிஎம்களின் செயல்பாடு குறித்து, வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஏடிஎம் நெட்வொர்க்காக எஸ்.பி.ஐ செயல்பட்டு வருகிறது.

இது ஜூன் 2017ல் 59,291 ஏடிஎம்களில் இருந்து, ஆகஸ்ட் 2017ல் 59,200ஆக குறைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி 10,502ல் இருந்து 10,083ஆகவும், எச்.டி.எஃப்.சி வங்கி 12,230ல் இருந்து, 12,225 ஆகவும் ஏடிஎம்களை குறைத்துள்ளன.

மும்பை போன்ற பெருநகரங்களில் விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் 7x5 சதுர அடியில் ஏடிஎம்களை நிர்வகிப்பதற்கு மாதம் ரூ.40,000 செலவு பிடிப்பதாக வங்கிகள் கூறுகின்றன. சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் ஏடிஎம்கள் நிர்வகிக்க மாதம் ரூ.8000 முதல் ரூ.15,000 வரை செலவாகிறது.

இவற்றுடன் பாதுகாவலர், ஏடிஎம் ஆபரேட்டர், மேலாண்மை கட்டணம், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை சேர்த்தால் ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவு பிடிக்கிறது.

Banks shutter ATMs as cities go digital, remove 358 over June-Aug.

அடுத்த செய்தி

டிரெண்டிங்