ஆப்நகரம்

Bank Holidays: வங்கிகளுக்கு 4 நாள் லீவு.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

மே 28 முதல் 31ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

Samayam Tamil 23 May 2022, 6:19 pm
பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு தனியார்மயமாக்க எடுத்து வரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மே 30, 31 ஆகிய நாட்களில் ஸ்ட்ரைக் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
Samayam Tamil Bank Strike


பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மே 30, 31 ஆகிய தேதிகளில் ஸ்ட்ரைக் நடைபெறும் என பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பேங்க் ஆஃப் பரோடா. மேலும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மிகப் பழைமை வாய்ந்த பொதுத்துறை வங்கியாகும். இந்நிலையில் இவ்விரு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

மீண்டும் வட்டி உயர்வு.. எகிறப்போகும் EMI.. ரிசர்வ் வங்கி ஆளுநர் கொடுத்த சிக்னல்!
வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்படி மே 30, 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி கிளைகள் மூடப்பட்டு, வங்கி ஊழியர்கள் பேரணி, தர்ணா போன்ற போராட்டங்களில் ஈட்பட இருக்கின்றனர்.

மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இரண்டு நாட்கள் இயங்காது. அதற்கு முன் மே 28, 29 ஆகிய தேதிகள் நான்காம் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என்பதால் அந்த இரண்டு நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே மே 28 முதல் 31 வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்