ஆப்நகரம்

உங்கள் பணத்தை ஆட்டையை போடும் வைரஸ்.. ஆண்ட்ராய்ட் மொபைல் பயனர்களுக்கு வார்னிங்!

ஆண்ட்ராய்ட் மொபைல்களை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க உதவும் சோவா ட்ரோஜன் பற்றி வங்கிகள் எச்சரிக்கை.

Samayam Tamil 5 Oct 2022, 12:05 pm
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள வங்கி செயலிகளை குறிவைத்து, பயனரின் தகவல்களை திருடி பணத்தை கொள்ளையடிக்க உதவும் சோவா (SOVA) என்ற ட்ரோஜன் பரவி வருவதாக பல்வேறு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
Samayam Tamil trojan


கடந்த சில ஆண்டுகளாக மொபைல் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயங்கர பிரபலமாகிவிட்டன. பெரிய பெரிய ஸ்டோர்கள் மட்டுமல்லாமல் சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகளும் கூட UPI போன்ற மொபைல் பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டனர்.

இந்நிலையில், ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வங்கி ஆப்களை தாக்கும் சோவா என்ற ட்ரோஜன் பரவி வருவதாக வங்கிகள் தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏராளமான ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்கள் இருப்பதால் இப்பிரச்சினை முக்கியமானதாக கருதப்படுகிறது.

பால், இறைச்சி விலை உயரும் அபாயம்.. காரணம் இதுதான்!
இந்த் ட்ரோஜனிடம் சிக்கினால் பயனர்களின் பணம் கொள்ளை போகும் அபாயமும் உள்ளது. இந்த ட்ரோஜனிடம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பொதுவாக, எந்தவொரு ஆப் டவுன்லோடு செய்ய வேண்டுமென்றாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.

அடையாளம் தெரியாத நபர்கள் உங்களுக்கு ஏதாவது link அனுப்பி அதில் இருந்து ஆப் டவுன்லோடு செய்ய சொன்னால் அதை தவிர்க்க வேண்டும். அந்த link வாயிலாக உங்கள் மொபைலுக்குள் ட்ரோஜன் நுழையக்கூடும் என எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த link வாயிலாக வரும் ஆப்கள் பார்ப்பதற்கு ஒரிஜினல் போலவே தோன்று. எனவே இதை நம்பி ஏமாறாமல், எந்தவொரு ஆப் வேண்டுமென்றாலும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வாயிலாக டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்