ஆப்நகரம்

சீன மொபைல் ஆப்களுக்கு அரசு எச்சரிக்கை! காரணம் என்ன?

இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட 59 சீன செயலிகள் சட்டவிரோதமாக இயங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jul 2020, 9:37 pm
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், முதற்கட்டமாக சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது இந்தியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டது அதன் வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக டிக்டாக் பயனாளர்களும் ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Samayam Tamil chinese apps


டிக்டாக் உள்ளிட்ட சீன மொபைல் செயலிகள் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட பிறகு அவை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் தளங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டன. ஆனாலும் இந்த செயலிகள் முறைகேடாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. உதாரணமாக, டிக்டாக் செயலியில் அதன் மொழியை துருக்கியாகி மாற்றி இந்தியர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறு மொழியை மாற்றிய பிறகு டிக்டாக் வழக்கம்போல இயங்கியது. அதேபோல, கூகுள் தளத்தில் இருந்தும் அதிகாரப்பூர்வமற்ற டிக்டாக் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

லாப மழையில் இந்துஸ்தான் யுனிலீவர்... நாளை ஹாட் பங்கு இதுதானா?

இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு தற்போது கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட 59 மொபைல் செயலிகளுக்கும் அரசு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறைகேடாக இந்தியாவில் இவற்றைச் செயல்படுத்துவது தவறு என்றும் இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய செயல் எனவும் கூறப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சீன செயலிகள் நேரடியாக அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் இயங்கினால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரிதாப நிலையில் பஜாஜ் பைனான்ஸ்... பங்குகளை என்ன செய்யலாம்?

இந்தியாவிலேயே டிக்டாக் போன்ற செயலிகளுக்கு ஈடான செயலிகள் இருக்கும்போது தடை செய்யப்பட்ட செயலிகளை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அரசு தரப்பில் கடுமையான உத்தரவுகள் மட்டுமல்லாமல் பயனாளர்கள் தரப்பிலும் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்