ஆப்நகரம்

பணத்தை பெருக்கும் பிக்சட் டெபாசிட்: எந்த வங்கியில் வட்டி அதிகம்?

ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை 5.75 சதவீதம் முதல் 6.4 சதவீதம் வட்டி கிடைக்கும். ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி வங்கிகளில் பிக்சட் டெபாசிட் மீது 7.5 சதவீதம் வரை வட்டி தரப்படுகிறது.

Samayam Tamil 8 Jul 2019, 1:45 pm
வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூதலீடு செய்வது கையிருப்பாக உள்ள பணத்தை வேகமாக பெருக்கவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் பணத்தை இரட்டிப்பாக்கும் அளவுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே முக்கியமா வங்கிகள் சிலவற்றில் இத்திட்டத்துக்கு கொடுக்கப்படும் வட்டி விகித அளவு எவ்வளவு எனப் பார்க்கலாம்.
Samayam Tamil 1547821012-investmenttips


எஸ்பிஐ:

ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக 211 நாட்கள் முதல் 365 நாட்களுக்குள் பிக்சட் டெபாசிட் செய்யும்போது 6.4 சதவீதம் வட்டி கிடைக்கும்.

46 முதல் 179 நாட்கள் முதலீடு செய்தால் 6.25 சதவீத வட்டி விகிதம் தரப்படுகிறது. 180 முதல் 210 நாட்கள் முதலீடு செய்தால் 6.35 சதவீதமும் 7 முதல் 45 நாட்கள் முதலீடு செய்தால் 5.75 சதவீத வட்டி விகிதமும் பெறலாம்.

மூத்த குடிமக்களுக்கு சிறப்பாக 0.5 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் வட்டி கிடைக்கிறது.

ஹெச்டிஎப்சி:

ஹெச்டிஎப்சி வங்கி இந்தியாவின் தனியார் வங்கிகளில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.4 சதவீதம் பெறலாம். மூத்த குடிமக்கள் என்றால் கூடுதலாக 0.5 சதவீதம் தரப்படுகிறது.

ஐசிஐசிஐ:

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 290 முதல் 1 ஆண்டு வரை முதலீடு செய்தால் 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது ஐசிஐசிஐ வங்கி. 3 ஆண்டு வரை முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 0.55 சதவீத வட்டி கூடுதலாகப் பெறலாம்.

ஆக்சிஸ் வங்கி:

9 முதல் 364 நாட்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 7.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது ஆக்சிஸ் வங்கி. மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீத வட்டியைத் திட்டத்தின் கீழ் தருகிறது. அதிகபட்சம் 7.5 சதவீதம் வரை வட்டி கொடுக்கிறது ஆக்சிஸ் வங்கி.

முதலீடு செய்வதற்கு முன் அந்தந்த வங்கியைத் தொடர்புகொண்டு வட்டி விகிதம் உள்ளிட் விவரங்கள் குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ளவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்