ஆப்நகரம்

தங்கத்தில் இப்படி முதலீடு செய்து பாருங்க: லாபம் கொட்டும்!

தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழிகளை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 25 Oct 2020, 2:41 pm
இந்தியாவை பொறுத்தவரை தங்கத்துக்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன. முதலீடு, நகைகள், கடன், தொழில் என தங்கத்திற்கு பல்வேறு பக்கங்கள் இருந்தாலும் இந்திய மக்கள் அதை ஒரு அந்தஸ்துக்கான பொருளாகவே பார்க்கின்றனர். இன்றைய காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.
Samayam Tamil best ways to invest in gold check what suits you
தங்கத்தில் இப்படி முதலீடு செய்து பாருங்க: லாபம் கொட்டும்!


​தங்க நகைகள்

இது மிக எளிதான முறை. சாதாரணமாக ஒரு நகைக் கடைக்கு சென்று தங்க நகைகளை வாங்கிவிடலாம். தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இதிலுள்ள லாபமும், ரிஸ்கும் மாறும். நகைகளை சேமித்து வைப்பதிலும், பாதுகாப்பதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. எனவே சிலர் இந்த முதலீட்டு முறையை தவிர்த்துவிடுகின்றனர்.

தங்க நாணயம், தங்கக் கட்டிகள்

இவற்றையும் சேமித்து வைத்து பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்காக லாக்கர் வசதியை நாட வேண்டியிருக்கிறது. அதற்காக கூடுதல் செலவுகளும் ஆகும்.

ஈ-கோல்டு

தங்கத்தை ஆன்லைனிலும் வாங்கலாம். பல்வேறு வங்கிகள், போன்பே போன்ற வாலட்டுகள் மூலம் ஆன்லைன் தங்கம் வாங்கலாம். தங்கம் விலைக்கு ஏற்ப லாபம், ரிஸ்க் மாறும். தங்கத்தை சேமித்து பாதுகாக்க வேண்டிய தலைவலி இல்லை.

தங்கப் பத்திரம்

ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரங்களை விநியோகித்து வருகிறது. இது ஒரு பாதுகாப்பான தங்கம் முதலீடு. தங்கத்தின் மதிப்பு உயர உயர பத்திரத்தின் மதிப்பும் உயரும். மேலும், ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வட்டி வருமானமும் கிடைக்கும்.

​கோல்டு ETF

இவை சாதாரண மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை போல தங்கத்தில் முதலீடு செய்வதற்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான். இதன் மதிப்பு மார்க்கெட்டுக்கு ஏற்ப உயரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்