ஆப்நகரம்

உஷார்! பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப் பெயரில் மோசடி.. அழைப்புகளையும் நம்ப வேண்டாம்!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரில் மோசடி கும்பலொன்று டீலர்ஷிப் வாங்கித் தருவதாகக் கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 5:21 pm
சமீபத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப்பை வாங்கித் தருவதாகக் கூறி வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Indian oil scam.




மேலும் இந்தியன் ஆயில் டீலர்ஷிப் குறித்து உங்களுக்கு ஏதேனும் செய்தி அல்லது அழைப்பு வந்தால், அது ஒரு பொறியாக இருக்கலாம். இந்த வகையான பொறிகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி அம்மோசடி கும்பல் இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப்பிற்கு ஈடாகப் பணம் தருவதாக மக்களை ஏமாற்றி வருவதாகவும், அச்செய்திகள் அனைத்தும் தவறானவை, அவற்றை நம்ப வேண்டாம் எனவும் நிறுவனம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. சமீப நாட்களில் இதுபோன்ற செய்திகள் மற்றும் அழைப்புகள் வருவதற்கு பலர் புகார் அளித்தும் வருகின்றனர்.

அதனால் பொதுமக்கள் யாரும் இத்தகைய செய்தியையோ, அழைப்புகளையோ நம்பி பணத்தை மூன்றாம் நபரிடம் கொடுத்து இழக்க வேண்டாம் எனவும், இழப்பிற்கு நிறுவனம் பொறுப்பாகது எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விரைவில் அந்த மோசடி குமபல் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டு வெளியிடப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்