ஆப்நகரம்

பாரத் பந்த்.. வங்கி சேவைகள் பயங்கர பாதிப்பு!

இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிப்பு.

Samayam Tamil 28 Mar 2022, 7:16 pm
மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியர்கள் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
Samayam Tamil bank strike


இதனால் வங்கி சேவைகள் நாடு முழுவதிலும் ஓரளவுக்கு பாதிக்கபப்ட்டது. குறிப்பாக பொதுத் துறை வங்கிகளில் பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கபப்ட்டன. அதிலும் செக் கிளியரன்ஸில் தாமதம் ஏற்பட்டது. எனினும், தனியார் வங்கிகளில் பெரிதாக பாதிப்பில்லை.

கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான பொதுத் துறை வங்கிக் கிளைகள் மூடப்பட்டதால் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் பல்வேறு கிளைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் சேவைகள் பாதிக்கப்பட்டன.

அகவிலைப்படி அரியர் எப்போ கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்!
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதாக பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக டெபாசிட்டுகளுக்கு வட்டியை உயர்த்த வேண்டும், சேவைக் கட்டணங்களை குறைக்க வேண்டும் எனவும் வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபோக, எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து எல்ஐசி ஊழியர்களும் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று பங்கேற்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்