ஆப்நகரம்

பென்சன் திட்டத்தில் மிகப் பெரிய ஷாக்.. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.. மத்திய அரசு அதிரடி!

அடல் பென்சன் திட்டத்தில் முக்கியமான விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இனி எல்லாரும் இணைய முடியாது.

Samayam Tamil 12 Aug 2022, 11:15 am
மத்திய மோடி அரசின் லட்சியத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிய விதியின்படி, வருமான வரி செலுத்துவோர் இனி அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்கு (APY) விண்ணப்பிக்க முடியாது. அரசின் இந்த முடிவு வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Samayam Tamil penison


மத்திய அரசின் இந்தப் புதிய விதிமுறை 2022 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, வருமான வரிச் சட்டத்தின்படி வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எவரும் அடல் பென்சன் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு யாராவது விண்ணப்பித்து இணைந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவரது கணக்கு உடனடியாக மூடப்படும். அதுவரை டெபாசிட் செய்யப்பட்ட பணம் அவரது கணக்கில் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

இனி அடல் பென்சன் திட்டத்தில் தொடங்கப்படும் கணக்குகள் குறித்து அரசு தரப்பில் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, அதில் எந்த முரண்பாடு இல்லை என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Pension: கை நிறைய பென்சன் கிடைக்கும்.. உடனே இந்தத் திட்டத்தில் சேருங்க!
தற்போதுள்ள விதிகளின்படி, நீங்கள் இந்திய குடிமகனாக இருந்து, 18 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராகவும், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவராகவும் இருந்தால், நீங்கள் அடல் பென்சன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும். இது நிறையப் பேருக்கு பயனுள்ளதாக உள்ளது. ஆனால் மத்திய அரசின் தற்போதைய விதிமுறை மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்