ஆப்நகரம்

வரி சேமிப்பு முதலீடு.. நீங்கள் செய்யக்கூடாத பெரிய தவறு!

வரி சேமிப்பு முதலீடு விஷயத்தில் நீங்கள் செய்யக்கூடாத தவறு.

Samayam Tamil 13 Feb 2022, 1:05 pm
வருமான வரித் தாக்கல் செய்வதில் இருந்து வரி சேமிப்பு முதலீடுகள் வரை பல்வேறு தவறுகளை நாம் செய்யக்கூடும். குறிப்பாக, வரி சேமிப்பு முதலீடுகளில், தான் செய்வது தவறு என்பதே தெரியாமல் பலரும் தவறு செய்துகொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil Tax


ஒரு நபர் உரிய நேரத்தில் வருமான வரி செலுத்தாவிட்டால் அவருக்கான வரித் தொகைக்கு வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல், வரித் தொகை பெரிதாக இருந்தால் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதேபோல, கடைசி தேதிக்கு முன்பாக வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால், தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். வருமான வரித் தாக்கல் செய்யவும், வருமான வரி செலுத்தவும் கடைசி தேதி இருக்கிறது. ஆனால், வரி சேமிப்பு முதலீடுகளுக்கு எந்தவொரு கால வரம்பும் இல்லாததால் தவறுகளுக்கு வழி வகுக்கிறது.

FD: வைப்பு நிதி வட்டியில் திடீர் மாற்றம்.. புதிய விகிதம் இதுதான்!
எனவே, பலரும் வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொள்ள நிதியாண்டின் உற்ஹ்டி வரை காத்திருக்கின்றனர். இதனால் முதலீட்டிலேயே பல தவறுகள் செய்கின்றனர். பலரும் முதலீட்டுத் திட்டத்தையே தவறாக தேர்வு செய்துவிடுகின்றனர்.

வரி சேமிப்புத் திட்டங்கள் நீண்டகால அடிப்படையிலான முதலீடுகள் என்பதால் அவசரகதியில் முடிவெடுக்காமல் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அதை பற்றி திட்டமிடாமல் கடைசி நேரத்தில் அவசரகதியில் ஏதோவொரு திட்டத்தில் பணத்தை போடுவது தவறு.

இதனால் நீண்டகால முதலீட்டு இலக்குகளை இழக்க நேரிடுகிறது. எனவே, நிதியாண்டு முடியும் வரை காத்திருக்காமல் முன்பாகவே சரியாக திட்டமிட்டு நல்ல வரி சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்