ஆப்நகரம்

கிரெடிட் கார்டு தொலைஞ்சு போச்சா? உடனே இதைப் பண்ணுங்க!

எஸ்பிஐ கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் அதிலிருந்து பணம் திருடப்படாமல் இருக்க உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

Samayam Tamil 15 Aug 2021, 8:23 pm
கிரெடிட் கார்டு இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு நகர்ப்புறங்களில் மிக அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அன்றாடச் செலவுகளை நிர்வகிப்பதற்கான முக்கிய கருவிகளில் ஒன்றாக கிரெடிட் கார்டுகள் உள்ளன. பணம் செலுத்துவதற்கான பொதுவான முறைகளில் ஒன்றாக இப்போது கிரெடிட் கார்டுகள் மாறிவிட்டன.
Samayam Tamil credit card


ஆன்லைன் மூலமாகவும் நேரடி விற்பனையிலும் நமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகள் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடுபோனாலோ என்ன செய்வீர்கள்?

நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, அந்த கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை யாரும் எடுத்துவிடாமல் தடுக்க வேண்டும். கிரெடிட் கார்டு வாங்கிய வங்கியிடம் முதலில் நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த கிரெடிட் கார்டை உடனடியாக செயலிழக்கச் செய்ய வலியுறுத்த வேண்டும். போன் மூலமாகவோ எஸ்எம்எஸ் மூலமாகவோ கிரெடிட் கார்டை பிளாக் செய்யலாம்.

பான் கார்டை ஆதாருடன் இணைச்சாச்சா? இல்லனா ஆபத்து!
வாடிக்கையாளர்கள் தங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 5676791 என்ற எண்ணுக்கு BLOCKXXXX என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இங்கே XXXX என்பது உங்களது கிரெடிட் கார்டின் கடைசி நான்கு இலக்கம்.

அழைப்பு மூலமாகவும் நீங்கள் பிளாக் செய்ய முடியும். அதற்கு 39020202 என்ற நம்பருக்கு கால் செய்ய வேண்டும். இந்த நம்பருக்கு முன்னர் உங்களுடைய STD code போட வேண்டும்.

உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள யோனோ ஆப் மூலமாகவும் கிரெடிட் கார்டை பிளாக் செய்ய முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்