ஆப்நகரம்

நாங்க அப்போவே அப்படி.. 500 ரூபாயில் தொடங்கி ரூ.150 கோடி.. நடிகை ஆலியா பட்டின் பிசினஸ் முகம்!

பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் வெற்றிகரமாக தொழில் செய்வது மட்டுமல்லாமல் முதலீட்டாளராகவும் வலம் வருகிறார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 16 Mar 2023, 3:26 pm
நடிகை ஆலியா பட் (Alia Bhatt) பிரபல பாலிவுட் நட்சத்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆலியா பட் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும், முதலீட்டாளராகவும் வலம் வருகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
Samayam Tamil ஆலியா பட்
ஆலியா பட்


ஆலியா பட் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் Ed-a-Mamma என்ற நிறுவாத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் Ed-a-Mamma நிறுவனத்தை தொடங்கி அதில் குழந்தைகள், சிறுவர்களுக்கான ஆடைகளை விற்பனை செய்ய தொடங்கினார்.

கடைசியில் இந்த நிறுவனம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. Ed-a-Mamma இணையதளத்தில் ஆர்டர்கள் குவிந்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மதிப்பும் 12 மாதத்தில் சுமார் 10 மடங்கு உயர்ந்துவிட்டது. இந்நிறுவனம் 2 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர்களுக்கு 800க்கும் மேற்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறது.

இந்நிறுவனத்தின் மதிப்பீடு ஏற்கெனவே 150 கோடி ரூபாயை தொட்டுவிட்டது. ஒரே ஆண்டில் தனது நிறுவனம் இவ்வளவு பெரிய சாதனையை படைத்திருப்பது பெருமை அடையச் செய்வதாக ஆலியா பட் தெரிவித்துள்ளார். Ed-a-Mamma நிறுவனம் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொழிலில்தான் வெற்றி என்றால் முதலீட்டிலும் ஆலியா பட்டுக்கு வெற்றிதான். நைகா, Phool.co, ஸ்டைல்கிராக்கர் போன்ற நிறுவனங்களில் ஆலியா பட் முதலீடு செய்துள்ளார். இதில் நைகா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஆகும். இன்று நைகா பங்கு விலை 138 ரூபாயாக இருக்கிறது.

ஆலியா பட்டின் சொத்து மதிப்பு சுமார் 299 கோடி ரூபாய். ஒவ்வொரு படத்துக்கும் அவர் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன.

ஆலியா பட் இப்போதுதான் தொழிலதிபர், முதலீட்டாளர் என்றில்லாமல் குழந்தை பருவத்திலேயே தனது தந்தை மகேஷ் பட் காலில் கிரீம் தேய்த்து விடுவதற்கு 500 ரூபாய் பெற்று வந்திருக்கிறார். இப்போது 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்