ஆப்நகரம்

HCL ஊழியர்களுக்கு ஜாக்பாட்... போனஸ் அறிவிப்பு!

ரூ.700 கோடி அளவில் ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்குவதாக ஹெச்சிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 8 Feb 2021, 12:43 pm
தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் தொழிலதிபரால் தொடங்கப்பட்ட ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல், சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி சிறந்த தொழில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வருவாய் அடிப்படையில் 10 பில்லியன் டாலர் அளவை எட்டி சாதனை படைத்துள்ள நிலையில், அதன் ஊழியர்கள் அனைவரையும் ஹெச்சிஎல் நிறுவனம் பாராட்டியுள்ளது.
Samayam Tamil hcl


இந்த மகிழ்ச்சியில் ஊழியர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கும் வகையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவளப் பிரிவு அதிகாரியான அப்பாராவ் தெரிவித்துள்ளார். ”10 பில்லியன் டாலர் வருவாய் இலக்கு என்பது ஒட்டுமொத்தமாக நமது தொழில்முனைவு உத்வேகத்துக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். நமது ஊழியர்கள் சுமார் 1.59 லட்சம் பேரின் பங்களிப்பு இதில் உள்ளது. இந்த வெற்றியை அடுத்து, ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

சென்னை காய்கறி விலை அதிரடி வீழ்ச்சி!

ஒரு ஆண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்தில் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் ஒரு முறை மட்டுமே. 10 நாட்களுக்கான சம்பளம் போனஸாக வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திலேயே இந்த போனஸ் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்