ஆப்நகரம்

10,000 பேரை வேலையை விட்டுத் தூக்கும் எண்ணெய் நிறுவனம்!

கொரோனா விளைவாகத் தனது 15 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக பிபி ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jun 2020, 5:21 pm
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல உலகின் அனைத்து நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகள் அனைத்தும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் மாபெரும் சக்திகள் கூட கொரோனாவை ஒழிக்க முடியாமல் திணறுகின்றன. கொரோனா பாதிப்பால் வேலையை இழந்து வாடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் வருவாய் இழந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் நிறுவனங்கள் ஒவ்வொன்றாகப் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
Samayam Tamil bp layoff


சமீபத்திய செய்தியாக, இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பெரிய ஆற்றல் நிறுவனமான BP தனது ஊழியர்களில் 15 சதவீதத்தினரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் மொத்தம் 70,100 பேர் வேலை பார்க்கும் நிலையில் அதில் சுமாராக 10,000 பேரை வேலையில் இருந்து நீக்குகிறது. இந்நிறுவனம் தனது தொழிலை கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு மாற்றுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையில் இந்தியா... கொரோனா செய்த வேலை!

BP நிறுவனத்தில் இங்கிலாந்தில் மட்டும் சுமார் 15,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் 2,000 பேரின் வேலை பறிக்கப்படவுள்ளது. தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பணிநீக்க அறிவிப்பில் அலுவலகப் பணியில் இருப்பவர்கள்தான் அதிகம் பணிநீக்கம் செய்யப்படவுள்ளார்கள். Front-line operational workers எனப்படும் களத்தில் இறங்கிப் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படப் போவதில்லை என்று BP நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் எண்ணெய் துறை நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைத்துக் கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் BP நிறுவனமும், தனது செலவுகளைக் குறைக்க இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்