ஆப்நகரம்

வாவ்.. ரயில்வேயில் இப்படி ஒரு மாற்றமா.. ஆனந்த் மஹிந்த்ரா பாராட்டு!

ரயில்வே நிலையத்தில் திருநங்கையர் கடை திறந்ததற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா பாராட்டு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 Mar 2023, 4:50 pm
மஹிந்த்ரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்த்ரா (Anand Mahindra) இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். எவ்வளவுதான் மிகப்பெரிய தொழிலதிபராகவும், பிசினஸில் பிஸியாக இருந்தாலும் கூட சமூக வலைதளமான ட்விட்டரில் ஆனந்த் மஹிந்த்ரா ஆக்டிவாக இருந்து வருகிறார்.
Samayam Tamil trans tea stall - anand mahindra
trans tea stall - anand mahindra


இந்நிலையில், ரயில் நிலையத்தில் திருநங்கையர் டீ கடை திறந்ததற்காக ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சருக்கும் ஆனந்த் மஹிந்த்ரா பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது ஒரு முற்போக்கான திட்டம் எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.

அதாவது, அசாம் மாநிலம் கவுகாத்தில் ரயில் நிலையத்தில் திருநங்கையரால் நடத்தப்படும் டீ கடை தொடங்கப்பட்டுள்ளது. ‘ட்ரான்ஸ் டீ ஸ்டால்’ என இந்த கடை அழைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே ரயில் நிலையத்தில் திருநங்கையர் நடத்தும் முதல் டீ கடை இதுவே ஆகும்.

இந்த டீ கடையின் படங்களை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த டீ கடை பிங்க் நிறத்தில் அமைந்துள்ளது. டீ, பிஸ்கெட், தின்பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவை இந்த கடையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டீ கடையை இரண்டு திருநங்கையர் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், திருநங்கையர் நடத்தும் டீ கடைக்கு ஆனந்த் மகிந்த்ரா பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்டரில், “என்னை பொறுத்தவரை இந்த ஒரு சிறு முயற்சியே மிகப்பெரிய முற்போக்கு திட்டங்களுக்கு நிகரான மாற்றத்தை கொண்டுவரக்கூடியது.

இந்திய ரயில்வே 800 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்குகிறது. முக்கியமாக, ஒருவரை கூட ரயில்வே ஒதுக்கி வைப்பதில்லை. பிராவோ அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்” என்று பாராட்டியுள்ளார்.


இந்த ட்ரான்ஸ் டீ கடை முழுக்க முழுக்க திருநங்கையரால் நடத்தப்படுகிறது. அசாம் திருநங்கையர் சங்கத்துடன் வட கிழக்கு ரயில்வே இணைந்து எடுத்த முயற்சியால் இந்த டீ கடை சாத்தியமாகியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்