ஆப்நகரம்

பிஸ்கட் விலை உயர்வு.. கடுப்பில் குட்டீஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்!

பிஸ்கட் விலையை உயர்த்துவதற்கு பிரிட்டானியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2022, 1:47 pm
அண்மைக்காலமாக பணவீக்கம் சூறாவளி போல் சூறையாடி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தத்தால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதுபோதாதென உக்ரைன் - ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை வேறு உயர்ந்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மற்றும் பல்வேறு உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
Samayam Tamil Britannia


பால், காபி, டீ, நூடுல்ஸ் என உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது பிஸ்கட் விலையும் உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய பிஸ்கட் விலையே உயருவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரிட்டானியா நிறுவனம் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைமை மோசமாக உள்ளதாகவும், பிஸ்கட் விலையை 7% உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் பிரிட்டானியா தெரிவித்துள்ளது.

சம்மருக்கு டூர் போறிங்களா? உங்களுக்கு ஒரு கடுப்பு நியூஸ்!
இதுகுறித்து பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் பெரி புளூம்பர்க் ஊடகத்திடம் பேசியபோது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ரஷ்யா - உக்ரைன் போரால் விநியோக அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பணவீக்கம் 3% உயரும் என எதிர்பார்த்தோம். ஆனால், ரஷ்யாவின் செயலால் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து சுமார் 8-9% உயர்ந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் போல இதுவரை எப்போதும் தொழில் மோசமாக இருந்ததில்லை.

ஏறக்குறைய எல்லா மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. விலை உயர்வு நுகர்வோரை பாதிக்கும். பிஸ்கட் பாக்கெட்டில் எடையை குறைக்கலாம். ஆனால் மக்கள் புத்திசாலிகள்; ஈசியாக கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே, விலை உயர்வு தாக்கம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்