ஆப்நகரம்

விலை உயரும் வாகனங்கள்... வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

வாகன எஞ்சின் மாற்ற விதிமுறையால் இந்த ஆண்டில் வாகனங்களின் விலை 10 சதவீதம் வரையில் உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jan 2020, 6:56 pm
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடி துறை எவ்வாறு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததோ அதுபோல, 2019ஆம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறை பெருத்த அடி வாங்கியது. பொருளாதார மந்தநிலையால் மக்களிடையே தேவை குறைந்து வாகன விற்பனை மங்கியது. பெட்ரோல் - டீசல் விலையேற்றம், உதிரிப் பாகங்கள் இறக்குமதிக்கு அதிக வரி, எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை நோக்கிய பயணத்தில் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்திய ஆட்டோமொபைல் துறையினர் கடந்த ஓராண்டில் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
Samayam Tamil விலை உயரும் வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை


இன்னும் சில ஆண்டுகளில் இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வாகன எஞ்சின்கள் படிப்படியாகத் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது வாகன எஞ்சின்களில் பிஎஸ்5 தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்5 வாகனங்களின் விலை இந்த ஆண்டில் 10 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

மீண்டு எழுந்த உற்பத்தித் துறை!

வர்த்தக வாகனங்களின் விலை 8 முதல் 10 சதவீதம் வரையில் உயரும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டால் ஆட்டோமொபைல் துறையும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான ராஜன் வதெரா தெரிவித்துள்ளார். வாகன எஞ்சின் மாற்ற விதிமுறையால் பயணிகள் வாகன உற்பத்திக்கான செலவுகள் 3 முதல் 7 சதவீதம் வரையில் உயரும் எனவும், அதனால் வாகனங்களுக்கான விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெற்றிநடை போடும் இன்ஃபோசிஸ்: கோடிக் கணக்கில் லாபம்!

கிராமப்புறங்களில் இருசக்கர வாகனங்களுக்கான தேவை மந்தமாக இருப்பதால் இந்த ஆண்டிலும் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் வரையில் உயர்ந்தால் ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பிருப்பதாக ராஜன் வதெரா கூறுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்