ஆப்நகரம்

மொஹரத்தை ஒட்டி, பங்குச் சந்தைகளுக்கு நாளை விடுமுறை!

மொஹரத்தை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Sep 2018, 6:54 pm
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று இந்தியப் பொருளாதாரம் பல சவால்களை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இது பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி சிறிது இறங்கி காணப்பட்டது.
Samayam Tamil Market


பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கடந்த 3 நாட்களில் ரூ.3.62 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் ஏற்படும் தொடர் சரிவால், முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். பங்குச்சந்தை போக்கை நீண்ட காலமாக கண்காணித்து வருபவர்கள் கூட, இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சற்று உயர்ந்து காணப்பட்டது. பொதுவாக இன்று காலை ஆசிய சந்தை உயர்வுடன் காணப்பட்டது. சீனா-அமெரிக்க இடையே வர்த்தகப் போர் துவங்கியுள்ள நிலையிலும், ஆசிய சந்தை இன்று பாசிடிவ்வாக காணப்பட்டது. இருந்தாலும், ஆசிய பங்குச் சந்தைகள் ஒரு அச்சத்துடன்தான் கடந்து செல்கிறது.

இந்த நிலையில் நாளை மொஹரம் என்பதால் இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

BSE, NSE closed tomorrow for Muharram holiday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்