ஆப்நகரம்

பி.எஸ்.என்.எல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75% தள்ளுபடி

பி.எஸ்.என்.எல் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 0.75% தள்ளுபடிசெய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNN 21 Dec 2016, 11:21 pm
டெல்லி: பி.எஸ்.என்.எல் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 0.75% தள்ளுபடிசெய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil bsnl customers to get 0 75 discount on e payment of bills
பி.எஸ்.என்.எல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75% தள்ளுபடி


கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனையடுத்து நாட்டில் பணப்புழக்கம் குறைந்தால் மத்திய அரசு மக்களை பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி செல்ல மக்களை வலியுறுத்தி வருகின்றது.

மேலும் பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்க மக்களிடம் பல்வேறு சலுகைகளையும் , தள்ளுபடிகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் பொதுதுறை தொலை தொடர்பு நிறுவமான பி.எஸ்.என்.எல் டிஜிட்டல் முறையில் கட்டணங்களை செலுத்தினால் 0.75% தள்ளுபடி செய்யப்படும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பணமில்லை பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்