ஆப்நகரம்

ஜியோ நிறுவனத்திற்கு எதிராக நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்

ஜியோ நிறுவனத்த காப்பாற்றத் துடிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிா்ப்பு தொிவித்து நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Samayam Tamil 3 Dec 2018, 12:01 pm
ஜியோ நிறுவனத்திற்கு எதிராகவும், 4 ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒக்கக் கோரியும் நாடு முழுவதும் அந்நிறுவன ஊழியா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
Samayam Tamil Bsnl Strike.


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) நிறுவனத்தில் பணியில் உள்ள அனைத்து பணியா்களின் சங்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக் கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டததைத் தொடா்ந்து பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் செய்தியாளா்களிடம் பேசுகையில், அண்மையில் உருவாக்கப்பட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டில் தொலைத்தொடா்பு துறையில் போட்டியாளா்களே இருக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

போட்டியாளா்கள் பட்டியலில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனமும் உள்ளது. போட்டியாளா்கள் இல்லாத பட்சத்தில் தாங்கள் நினைக்கும் கட்டணத்தில் பொதுமக்களுக்கு சேவை வழங்கலாம் என்ற லாப நோக்கத்திலேயே அந்த நிறுவனம் தற்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

மத்திய அரசும் அம்பானியின் ஜியோ நிறுவனத்தை தாங்கி பிடிக்கும் நோக்கில் செல்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய அரசு தற்போது வரை 4 ஜி சேவையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.


எனவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி சேவையை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஊழியா்களின் ஓய்வுத் தொகை, சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் (டிசம்பா் 3) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்