ஆப்நகரம்

பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் அறிமுகம்

விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக, பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ET Now 4 Apr 2016, 5:02 pm
விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக, பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil bsnl says gearing up to launch 4g services in 14 telecom circles
பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் அறிமுகம்


4ஜி சேவையில் இயங்கக்கூடிய போன்களை, ஆப்பிள், மோட்டோரோலா, லெனோவா, கூகுள், நோகியா ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்துவருகின்றன.

இதற்கேற்ப, ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து, வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் அதற்கானப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

தற்போது, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், விரைவில் 4ஜி சேவை வழங்க உள்ளதாகக் கூறியுள்ளது. ஏற்கனவே, சண்டிகார் உள்ளிட்ட சில பகுதிகளில் சோதனை முயற்சியாக, 4ஜி சேவையை இந்நிறுவனம் வழங்கிவருகிறது.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக, 14 தொலைத்தொடர்பு வட்டங்களிலும், பின்னர் இதர தொலைத்தொடர்பு வட்டங்களிலும் 4ஜி சேவை நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக, தொலைத்தொடர்பு சேவைக் கோபுரங்கள் நிறுவுதல் உள்ளிட்ட கட்டுமான வசதிகளை முழுவீச்சில் மேற்கொண்டுவருவதாக, பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்