ஆப்நகரம்

Go First: நிதி நெருக்கடியால் திவால் நிலையில் கோ பர்ஸ்ட் நிறுவனம்!

Go First voluntary insolvency resolution: கோ பர்ஸ்ட் நிறுவனம் தாமாகவே திவால் தீர்வு நடவடிக்கைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 2 May 2023, 5:41 pm
பிரபல ஏர்லைன் நிறுவனமான கோ பர்ஸ்ட் (Go First) தாமாகவே திவால் தீர்வு நடவடிக்கைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil go first
go first


பட்ஜெட் விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கோ பர்ஸ்ட் நிறுவனம் அண்மைக்காலமாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு இரு காரணம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கோ பர்ஸ்ட் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை.

இதுமட்டுமல்லாமல், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிராட் & விட்னி (PRatt & Whitney) நிறுவனம் விமான எஞ்சின்களை வழங்காமல் தாமதித்து வருகிறது. இதனால் கோ பர்ஸ்ட் நிறுவனத்தி 28 விமானங்கள் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கின்றன.

இதனால் கோ பர்ஸ்ட் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த சூழலில் மே 3, 4 தேதிகளுக்கான விமான டிக்கெட்டுகளை கோ பர்ஸ்ட் நிறுவனம் ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்தப்படும் எனவும் கோ பர்ஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், திவால் தீர்வு நடவடிக்கைகளுக்காக தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) கோ பர்ஸ்ட் நிறுவனம் தாமாகவே விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. இப்படி திவால் தீர்வு நடவடிக்கைக்கு தாமாகவே விண்ணப்பம் தாக்கல் செய்வது வருத்தமான முடிவு என கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் CEO கௌசிக் கோனா தெரிவித்துள்ளார்.

திவால் தீர்வு நடவடிக்கை குறித்த தகவலை இந்திய அரசுக்கும் கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துவிட்டது. விரைவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ-விடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கோ பர்ஸ்ட் தெரிவித்துள்ளது.

மேலும் பல்வேறு முதலீட்டாளர்களிடம் கோ பர்ஸ்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக பிரபல வாடியா குழுமம் (Wadia Group) கோ பர்ஸ்ட் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், எஞ்சின்களை வழங்காமல் தாமதித்து நிதி நெருக்கடியை ஏற்படுத்திய பிராட் & விட்னி நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்