ஆப்நகரம்

கம்மி விலையில் வீடு, நிலம் வாங்க செம வாய்ப்பு.. இதை தவற விட்டுடாதிங்க!

குறைந்த விலையில் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்க சூப்பர் வாய்ப்பு.

Samayam Tamil 12 Aug 2021, 2:33 pm

ஹைலைட்ஸ்:

  • மிகக் குறைந்த விலையில் சொத்துகளை வாங்கலாம்
  • அதுவும் இந்தியா முழுவதும் வாங்க முடியும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Property
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா மெகா ஆன்லைன் ஏலத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் சொத்துகளை வாங்க முடியும். அதுவும், மார்க்கெட் ரேட்டை காட்டிலும் குறைந்த ரேட்டில் சொத்துகளை வாங்கலாம்.
ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று மெகா ஆன்லைன் ஏலம் நடைபெறவுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா ட்விட்டரில் “இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் சொத்து வாங்கும் உங்கள் கனவில் இன்னும் சில தினங்களில் நனவாகப்போகிறது. பேங்க் ஆஃப் பரோடாவின் மெகா ஆன்லைன் ஏலத்தை பயன்படுத்தி ஈசியாக சொத்து வாங்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. 10,000 முதலீடு.. லட்சங்களில் வருமானம்!
ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மெகா ஆன்லைன் ஏலத்தில் என்னென்ன சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன?

1. வீடுகள்

2. ஃபிளாட்டுகள்

3. அலுவலக இடங்கள்

4. நிலம் / plots

5. தொழில் மற்றும் வணிக சொத்துகள்

உடனடியாக சொத்துகளை வாங்கிவிடலாம். மேலும், எளிய விதிகளுடன் வங்கிக் கடனும் பெற்றுக்கொள்ளலாம். ஏலம் குறித்த கூடுதல் விவரங்களை பெற இந்த Linkஐ கிளிக் செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்