ஆப்நகரம்

உடனே பணம் வேணுமே.. சாட் ஜிபிடி கொடுத்த ஐடியா.. ஒரே நிமிடத்தில் வந்த அதிர்ஷ்டம்!

சாட் ஜிபிடி (ChatGPT) கொடுத்த பதிலால் உடனடியாக பணத்தை பெற்றுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Apr 2023, 5:57 pm
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் OpenAI நிறுவனம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற ஏஐ சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் இருந்தே இந்த சாட் ஜிபிடி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil chatgpt
chatgpt


சக மனிதரை போல உரையாடுவது, கட்டுரை எழுதுவது, coding செய்வது, என்ன கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்வது, சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது, கல்வி சார்ந்த விஷயங்கள், தொழில் சார்ந்த விஷயங்கள் என எதை கேட்டாலும் பதில் சொல்கிறது சாட் ஜிபிடி.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜூஷுவா பிரவுடர் என்பவர் தனக்கு கிடைக்க வேண்டிய 210 டாலர் தொகையை பெறுவதற்கு சாட் ஜிபிடி உதவியதாக தெரிவித்துள்ளார். அவரை பார்த்து மற்றவர்களும் முயற்சித்து அதேபோல பணத்தை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஜோஷுவா தனக்கு பணம் தேவை என சாட் ஜிபிடியிடம் கேட்டுள்ளார். அடுத்த ஒரே நிமிடத்தில் அவர் வங்கி கணக்கிற்கு 210 டாலர் (17200 ரூபாய்) வந்து சேர்ந்துள்ளது என அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண மக்களுக்கு California state controller என்ற அரசு இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை கண்டறிந்த சாட் ஜிபிடி, ஜோஷுவா எப்படி தனக்கு கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் தொகையை பெறலாம் என வழிகாட்டியுள்ளது.

சாட் ஜிபிடி கூறிய வழிமுறைகளை ஜோஷுவாவும் கடைப்பிடித்துள்ளார். அடுத்த ஒரே நிமிடத்தில் அவர் வங்கி கணக்கில் 209.67 டாலர் வந்து சேர்ந்ததாக மகிழ்ச்சியாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இவரை பார்த்து மற்றவர்களும் இதேபோல முயற்சித்துள்ளனர். அவர்களுக்கும் வங்கி கணக்கில் உடனடியாக பணம் வந்துசேர்ந்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதிலும் ஒருவர் தனக்கு 1000 டாலர் பணம் வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.


எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்