ஆப்நகரம்

ஆதார் கார்டை வைத்து பணத்தை திருட முடியுமா?

ஒருவருடைய ஆதார் கார்டு மூலமாக வங்கிக் கணக்கில் பணத்தை திருட முடியுமா? ஆதார் பாதுகாப்பானதுதானா?

Samayam Tamil 11 Apr 2021, 6:20 pm
ஆதார் கார்டுகள் இப்போது தனிமனிதனின் மிக முக்கியமான அடையாளமாக மாறிவிட்டன. இந்தியாவில் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை வந்துவிட்டது. சிம் கார்டு வாங்குவது முதல் அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவது வரை ஆதார் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆதார் கார்டுகள் பான் கார்டுடனும், வங்கிக் கணக்குடனும் இணைக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள ஆதார் கார்டுகள் ஏதேனும் மோசடியாளரின் கையில் சிக்கினால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.
Samayam Tamil aadhaar


உண்மையில் ஆதார் கார்டுகளை வைத்து வங்கிக் கணக்கில் பணத்தைத் திருட முடியாது. ஆதார் என்பது ஒரு அடையாள ஆவணம் மட்டுமே. ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவேண்டுமானால் சம்பந்தப்பட்ட நபரின் கையெழுத்து வேண்டும். வேறு வழிகளில் எடுப்பதாக இருந்தாலும் ஓடிபி சரிபார்ப்புக்கு உட்பட வேண்டும். அதுவும், வங்கிகள் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்கள் வேறு யாரிடமும் பகிரப்படாது. சொல்லப்போனால் ஆதார் அமைப்பே தனிநபரின் வங்கிக் கணக்கு விவரங்களை வைத்திருப்பதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நிம்மதி.. எஸ்பிஐ சொன்ன ஹேப்பி நியூஸ்!
அதேபோல, ஒருவரது ஆதார் கார்டை வைத்து வங்கியில் கணக்கு திறக்க முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. ஆதார் கார்டு உரிமையாளர் வங்கிக் கணக்கு தொடங்குவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், ஒருவரது ஆதார் கார்டை வேறொருவர் பயன்படுத்தி வங்கிக் கணக்கு திறப்பது முடியாத காரியம். ஏனெனில், வங்கிக் கணக்கு திறக்கும்போது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் KYC நடைமுறையில் வங்கிகள் மிகவும் கவனமுடன் செயல்படுகின்றன. அவ்வாறு வேறொருவர் ஆதார் கார்டு மூலமாக வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு, நிதி மோசடி நடைபெற்றால் அதற்கு அந்த வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்