ஆப்நகரம்

உங்க ஆதாரை வேறொருவர் பயன்படுத்த முடியுமா?

ஒருவரது ஆதார் கார்டு காப்பியை வைத்து இன்னொருவர் வங்கிக் கணக்கு திறந்தால் என்ன நடக்கும்?

Samayam Tamil 22 Jul 2021, 8:05 pm
ஆதார் கார்டு என்பது இந்தியாவில் தனிமனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் கார்டில் தனிநபரின் பெயர், முகவரி, மொபைல் நம்பர், பிறந்த தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன. பலருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம்... ஒருவரது ஆதார் கார்டை இன்னொருவர் தவறாகப் பயன்படுத்த முடியுமா என்று...
Samayam Tamil aadhaar


ஏனெனில் வங்கிக் கணக்கு எண், பான் கார்டு, பிஎஃப் கணக்கு, மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் கார்டை வைத்து ஒருவரது வங்கிக் கணக்கில் பணத்தை திருட முடியுமே என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும். இதுபோன்ற சந்தேகங்களுக்கு ஆதார் அமைப்பு (UIDAI) விளக்கம் அளித்துள்ளது. ஒருவரது ஆதார் கார்டை வைத்து இன்னொருவர் தவறுதலாக வங்கிக் கணக்கு திறந்தால் அதற்கு அந்த ஆதார் கார்டுக்கு சொந்தக்காரர் பொறுப்பு இல்லை என்று ஆதார் அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

கம்மி விலையில் பெட்ரோல் போடலாம்... இந்த கார்டு இருந்தால் போதும்!!
இதுபோன்ற சூழலில் எந்த வங்கியில் தவறாக வங்கிக் கணக்கு திறக்கப்படுகிறதோ அந்த வங்கிதான் இதற்குப் பொறுப்பாகும். ஏனெனில், ஒருவரது பெயரில் வங்கிக் கணக்கு திறக்கும் போது அவருடைய ஆதார் போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கி சரிபார்க்க வேண்டும். அதன் பின்னரே வங்கிக் கணக்கு திறக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் வங்கிகள் அனைத்தும் KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கின்றன. அதையும் தாண்டி இன்னொருவர் ஆதாரை வைத்து வங்கிக் கணக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை. அப்படி திறக்கப்பட்டாலும் அதற்கு அவ்வங்கியே பொறுப்பேற்க வேண்டும்.

ஆதார் மட்டுமல்லாமல், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றையும் தவறாகப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு திறக்கப்பட்டாலும் இதேபோலத்தான்...

அடுத்த செய்தி

டிரெண்டிங்