ஆப்நகரம்

ரிஸ்க் இல்லை.. நல்ல வருமானம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான திட்டம்!

ரிஸ்க் இல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய கனரா தன்வர்ஷா திட்டம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 5 Dec 2022, 12:31 pm
சிறு முதலீட்டாளர்களாகிய பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஃபிக்சட் டெபாசிட், ரெகரிங் டெபாசிட், தபால் அலுவலக திட்டங்கள் போன்றவை இருக்கின்றன. இவற்றில் ரிஸ்க் குறைவு, அதேபோல வருமானமும் குறைவு.
Samayam Tamil cash
cash


இதுபோக பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளும் இருக்கின்றன. இவற்றில் ரிஸ்க் உண்டு, அதே நேரம் வருமானமும் அதிக கிடைக்கக்கூடும். எனினும், ரிஸ்க்கும் குறைவாக இருக்க வேண்டும், வருமானமும் அதிகம் வேண்டும் என்பவர்களுக்கு கனரா வங்கி ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி (Canara Bank) கனரா தன்வர்ஷா (Canara Dhanvarsha) என்ற ரெகரிங் டெபாசிட் (Recurring deposit) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் நாம் முதலீடு செய்வதும், வருமானம் ஈட்டுவதும் செய்துகொள்ளலாம்.

கணக்கு தொடங்குதல்

கனரா தன்வர்ஷா திட்டத்தின் கீழ் தனியாகவோ, கூட்டாகவோ (Joint account), 18 வயதுக்கு கீழானவர் பேரில் பாதுகாவலரோ (guardian), நிறுவனங்களோ, சங்கங்களோ, அறக்கட்டளையோ கணக்கு தொடங்கிக்கொள்ளலாம்.

இந்தியாவில் குவியும் 10,000 கோடி டாலர்.. எல்லாம் இந்தியர்கள் அனுப்பும் பணம்!
டெபாசிட் தொகை

கனரா தன்வர்ஷா கணக்கில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாயாவது டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துகொள்ளலாம். ஒரே மாதத்தில் தவணையாகவும் செலுத்திக்கொள்ளலாம்.

மெச்சூரிட்டி

கனரா தன்வர்ஷா திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு காலம் 1 ஆண்டு. அதன்பின் மூன்று மூன்று மாதங்களாக நீட்டித்துக்கொள்ளலாம். அதிகபட்ச காலம் 10 ஆண்டுகள்.

வட்டி விகிதம்


கனரா தன்வர்ஷா திட்டத்தில் 6.25% முதல் 7% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு மட்டும் 180 நாட்கள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்தால் கூடுதலாக 0.50% வட்டி வழங்குகிறது கனரா வங்கி.

கடன்

கனரா தன்வர்ஷா திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள் டெபாசிட் தொகையில் 90% வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்