ஆப்நகரம்

கார் லோன் வாங்கணுமா... எந்த வங்கியில் வாங்கினால் நல்லது?

எந்தெந்த வங்கியில் கார் லோன் எவ்வளவு வட்டியில் கிடைக்கிறது எனவும், கூடுதல் கட்டணங்கள் எவ்வளவு என்றும் பார்க்கலாம்.

Samayam Tamil 27 Oct 2020, 6:04 pm
கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. மக்கள் அனைவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் கார் உள்ளிட்ட சொத்துகளை வாங்க நினைத்த பலர் நிதி நெருக்கடியால் தங்களது எண்ணத்தைக் கைவிட்டனர். இப்போது மீண்டும் தங்களது எண்ணப்படி வாகனம் வாங்கும் முனைப்பில் பலர் உள்ளனர். வாகனம் வாங்க முழுத் தொகை இல்லாவிட்டாலும் குறைந்த வட்டியில் எந்த வங்கியில் கடன் கிடைக்கும் என்று பலர் தேடிக்கொண்டிருப்பார்கள். அதோடு, கடனுக்கான செயலாக்கக் கட்டணம் எந்த வங்கியில் மிகவும் குறைவாக இருக்கும் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான தகவல்கள் இதோ...
Samayam Tamil car loan


இந்தியன் பேங்க்:

வட்டி - வருடத்துக்கு 8.05 சதவீதம் முதல்

செயலாக்கக் கட்டணம் - கடன் தொகையில் 0.230 சதவீதம். அதிகபட்சம் ரூ.10,236 வரை.

பேங்க் ஆஃப் பரோடா:

வட்டி - 7.50 சதவீதம் முதல்

செயலாக்கக் கட்டணம் - கடன் தொகையில் 0.50 சதவீதம். அதிகபட்சம் ரூ.10,000 ஜிஎஸ்டியுடன்.

கனரா வங்கி:

வட்டி - 7.30 சதவீதம் முதல்

செயலாக்கக் கட்டணம் - கடன் தொகையில் 0.25 சதவீதம். அதிகபட்சம் ரூ.5,000 வரை.

ஆக்சிஸ் பேங்க்:

வட்டி - 8.85 சதவீதம் முதல்

செயலாக்கக் கட்டணம் - குறைந்தபட்சம் ரூ.3,500 முதல் அதிகபட்சம் ரூ.5,500 வரை.

ஹெச்டிஎஃப்சி பேங்க்:

வட்டி - 8.80 சதவீதம்

அதிகபட்ச கடன் தொகை - ரூ.3 கோடி

கடன் காலம் - 84 மாதங்கள்.

ஐசிஐசிஐ பேங்க்:

வட்டி - 8 சதவீதம்

அதிகபட்ச கடன் தொகை - கார் மாடலைப் பொறுத்து.

கடன் காலம் - 84 மாதங்கள்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

வட்டி - 8.85 சதவீதம்

கடன் தொகை - கார் விலையில் 100% வரை

கடன் காலம் - 96 மாதங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்