ஆப்நகரம்

கார் வாங்க ஆள் இல்லை... கதறும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

நவம்பர் மாதத்தில் கார் விற்பனை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 6:24 pm
சர்வதேச அளவில் செமிகண்டெக்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் வாகன உற்பத்தியும் விற்பனையும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சென்ற நவம்பர் மாதத்தில் வாகன விற்பனையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நவம்பர் மாதத்தில் 1,09,726 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. 2020 நவம்பர் மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1,35,775 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் தற்போது 19.19 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil car sales


மாருதி சுஸுகி நிறுவனத்தைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் வாகன விற்பனையில் 24.18 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2020 நவம்பர் மாதத்தில் 48,800 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2021 நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 37,001 ஆகக் குறைந்துள்ளது. 14,214 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்த கியோ மோட்டார்ஸ் நிறுவனம் 32.39 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பணத்தை சூப்பரா சேமிப்பது எப்படி? 5 நச் டிப்ஸ்!
ஹோண்டா நிறுவனத்தின் வாகன விற்பனை 45.38 சதவீதமும், ரினால்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 50.38 சதவீதமும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. டாடா மோட்டார்ஸ், மகிந்திரா & மகிந்திரா, நிசான், ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் 2020 நவம்பர் மாதத்தை விட 2021 நவம்பர் மாதத்தில் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து முன்னேற்றம் கண்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக நவம்பர் மாதத்தில் 2,45,217 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 202 0 நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,86,236 ஆக இருந்தது. இது 14.33 சதவீத வீழ்ச்சியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்