ஆப்நகரம்

வீடு தேடி வரும் வங்கி... ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சூப்பர் வசதி!

கொரோனா பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வீடு தேடி வந்து சேவை வழங்கும் பல்வேறு வசதிகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 9 Jun 2021, 7:53 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பிரச்சினையால் பொது இடங்களுக்குச் செல்வதும் பல்வேறு சேவைகளைப் பெறுவதும் சிரமமாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் டோர் டெலிவரி சேவைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2018ஆம் ஆண்டு முதலே டோர் ஸ்டெப் பேங்கிங் சேவையை வழங்கி வருகிறது.
Samayam Tamil sbi


கேஷ் பிக்கப்
கேஷ் டெலிவரி
செக் பிக்கப்
ஃபார்ம் 15ஹெச் பிக்கப்
டிராஃப்ட் டெலிவரி
ஆயுள் சான்றிதழ் பிக்கப்
கேஒய்சி டாக்குமெண்ட் பிக்கப்

மேற்கூறிய சேவைகளை இந்த ஊரடங்கு காலத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சிறப்பாக வழங்கி வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மேற்கூறிய சேவைகள் கிடைக்கின்றன. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு, கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கப்பட்டிருந்தால் இச்சேவைகளைத் தங்குதடையின்றிப் பெறலாம்.

PMVVY vs SCSS: மூத்த குடிமக்களுக்கு சிறந்த திட்டம் எது?
வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளையிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவைகள் கிடைக்கும். ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.20,000 வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் கேஷ் டெபாசிட், கேஷ் வித்டிரா செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்