ஆப்நகரம்

வரி செலுத்துவோருக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு!

கடந்த ஆறு மாதங்களில் வரி செலுத்திய 33 லட்சம் பேருக்கு ரூ.1.18 லட்சம் கோடி ரீஃபண்ட் தொகை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Oct 2020, 6:52 pm
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் மத்திய அரசு வேகமாக வழங்கி வருகிறது.
Samayam Tamil refund


அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையில் மொத்தம் 33.54 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.18 லட்சம் கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 31.75 லட்சம் பேருக்கு ரூ.32,230 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கார்பரேட் வரியின் கீழ் 1.78 லட்சம் பேருக்கு ரூ.86,094 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு வரி செலுத்தியோருக்கான ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி: மத்திய அரசு அறிவிப்பு!

முன்னதாக செப்டம்பர் 15 வரையில் 31 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டிருந்தது. அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் மொத்தம் 30.92 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.06 கோடி வழங்கப்பட்டது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 29.17 லட்சம் பேருக்கு ரூ.31,741 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டது. அதேபோல, கார்பரேட் வரியின் கீழ் 1.74 லட்சம் பேருக்கு ரூ.74,729 கோடியும் வழங்கப்பட்டது. ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்குவது மட்டுமல்லாமல், நேர்மையாக வரி செலுத்துவோரைக் கௌரவிக்கும் புதிய திட்டத்தையும் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்