ஆப்நகரம்

இமயமலை சாமியார் விவகாரம்.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சிபிஐ செக்!

பங்குச் சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.

Samayam Tamil 22 Apr 2022, 2:38 pm
பங்குச் சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் குழும அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் மீது சிபிஐ நேற்று குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil chitra ramkrishna


பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஊழல் செய்ததாகவும், அடையாளம் தெரியாத இமயமலை சாமியார் ஒருவரின் அறிவுரை அடிப்படையில் பங்குச் சந்தை சார்ந்த முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா எடுத்துள்ளதாகவும் செபி குற்றம்சாட்டியது.

இதையடுத்து ஆனந்த் சுப்ரமணியனை பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் சிபிஐ கைது செய்தது. பின்னர் மார்ச் 6ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இவ்வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனியர் சிட்டிசன்களுக்கு புது திட்டம்.. அதிக வருமானம் சம்பாதிக்கலாம்!
இவ்வழக்கில், சித்ரா ராமகிருஷ்ணா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், இமயமலை சாமியார் அறிவுரைப்படி பங்குச் சந்தை சார்ந்த முடிவுகளை எடுத்துள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், ஆனந்த் சுப்ரமணியன்தான் இமயமலை சாமியார் போல வேடமிட்டு இந்த ஊழலில் ஈடுபட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆனந்த் சுப்ரமணியன்தான் அந்த இமயமலை சாமியார் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் தற்போது சிபிஐ ஈடுபட்டுள்ளது. இவ்வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சித்ரா ராம்கிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் மீது நேற்று சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிபிஐ முன்வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்