ஆப்நகரம்

சேவைக் கட்டணம் ரூல்ஸ்.. மத்திய அரசு பிடிவாதம்.. கோர்ட்டில் மேல்முறையீடு!

சேவைக் கட்டண விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு.

Samayam Tamil 11 Aug 2022, 4:54 pm
உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் மிக அதிக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பல இடங்களில் சேவைக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் அண்மையில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உணவகங்கள் வலுக்கட்டாயமாக சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
Samayam Tamil service charge


மேலும், சேவை கட்டணங்கள் குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வெளியிட்டது. அதில், சேவை கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கக்கூடாது, பில்லில் சேவைக் கட்டணத்தை நீக்கும்படி வாடிக்கையாளர் கூறினால் நீக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் இடம்பெற்றன.

இதையடுத்து, சேவைக் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு சட்ட அடிப்படைகள் இல்லை என தேசிய உணவகங்கள் சங்கம் கூறியது. மேலும் விதிமுறைகளுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேசிய உணவகங்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்தது.

பிரதமர் வீட்டு வசதி திட்டம் 2024 வரை நீட்டிப்பு.. பயனாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
இதையடுத்து, சேவைக் கட்டணம் தொடர்பான மத்திய அரசின் விதிமுறைகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இடைக்கால தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மனு ஆகஸ்ட் 16ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்