ஆப்நகரம்

சிமெண்ட் விலை உயர்வு! தடுக்க வருகிறது ’வலிமை’ சிமெண்ட்!

சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Oct 2021, 2:13 pm
சென்ற மார்ச் மாதத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 420 ரூபாயாக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் சிமெண்ட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு 490 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். இதையடுத்து சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டது.
Samayam Tamil cement


அடுத்த சில வாரங்களிலேயே சிமெண்ட் விலை குறைந்து 420 ரூபாய்க்கு வந்தது. ஆனால் இது நீடிக்கவில்லை. நிலக்கரி தட்டுப்பாடு, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சிமெண்ட் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் சிமெண்ட் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் 490 ரூபாய்க்கு வந்தது. எனினும் அரசின் தலையீட்டால் விலை குறைக்கப்பட்டு 440 ரூபாய்க்கு வந்தது. மார்ச் மாத விலையுடன் ஒப்பிடும்போது இது 20 ரூபாய் அதிகம்தான்.

காய்கறி வாங்கலயா? ரேட் பார்த்து வாங்குங்க!
சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தரப்பிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பாக சிமெண்ட் உற்பத்தியும் விற்பனையும் அதிகப்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பாக விற்பனை செய்யப்படும் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 350 ரூபாயாக உள்ளது. தனியார் சிமெண்ட் விலையுடன் ஒப்பிடும்போது 90 ரூபாய் குறைவாக உள்ளது.

சிமெண்ட் விலைக் குறைப்புக்காக வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிமெண்ட் உற்பத்தியை உயர்த்தி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்