ஆப்நகரம்

12 கிலோ தங்க நாணயம்.. 35 ஆண்டுகளுக்கு பின் தேடுதல் வேட்டையில் மத்திய அரசு!

ஜகாங்கீர் காலத்து தங்க நாணயத்தை மீட்பதற்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு பின் தேடுதல் வேட்டையில் மத்திய அரசு.

Samayam Tamil 27 Jun 2022, 6:39 pm
முகலாய அரசரான ஜகாங்கீர் காலத்து அரிய தங்க நாணயத்தை தேடும் பணியை 35 ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு மீண்டும் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.
Samayam Tamil jahangir gold coin


முகலாய அரசர் ஜகாங்கீர் ஆட்சிக்காலத்தில் 12 கிலோ எடையுள்ள இரண்டு தங்க நாணயங்கள் உருவாக்கப்பட்டன. இதில் ஒரு நாணயம் ஜகாங்கீரிடம் இருந்து ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் ஓஸ்மான் அலி கானுக்கு கொடுக்கப்பட்டது.

பின்னர் ஓஸ்மான் அலி கானிடம் இருந்து ஹைதராபாத்தின் எட்டாவது பட்டத்து நிஜாம் முக்கரம் ஜாவுக்கு கிடைத்தது. கடைசியாக முக்கரம் ஜாவிடம்தான் இந்த நாணயம் இருந்தது.

இந்திய குடும்பங்களின் பாதி பணம் இதில்தான் இருக்கிறது.. யாரும் எதிர்பார்க்காத சர்பிரைஸ்!
மற்றொரு 12 கிலோ தங்க நாணயம் ஈரான் தூதர் யாத்கர் அலிக்கு கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 1988ஆம் ஆண்டில் முக்காரம் ஜா தனது இரண்டு நிறுவனங்களுக்காக கடன் பெறுவதற்கு சுவிச்சர்லாந்தில் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஏலத்தில் 12 கிலோ தங்க நாணயத்தை விற்க முயன்றதாக தெரிகிறது.

ஹைதராபாத்தின் பெருமையாக கருதப்படும் இந்த நாணயத்தை மீட்பதற்கு அப்போதே மத்திய அரசு சிபிஐ அதிகாரிகளை வைத்து முயற்சி செய்தது. ஆனால் அப்போது நாணயத்தை மீட்க முடியவில்லை. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் அந்த நாணயத்தை மீட்கும் முயற்சியை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்