ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு மூன்று ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் சம்பள உயர்வு!!

அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது...

Samayam Tamil 11 Feb 2022, 8:36 pm
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூன் ஆகிய மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil salary hike


தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதமே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடியரசு தினத்துக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிப்பு வரும் என ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

இதுவரை அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

10 ரூபாய் காசு செல்லாதா? மத்திய அரசு சொல்றதை கேளுங்கப்பா!
இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி 34% ஆக உயரும். இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட பென்சனர்களும் பயன்பெறுவர்.

அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் வீட்டு வாடகை படியும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வீட்டு வாடகை படி பற்றிய அறிவிப்புக்காகவும் ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்