ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இன்னொரு சம்பள உயர்வு!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Nov 2021, 11:41 am
புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. புத்தாண்டு பிறந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி காத்திருக்கிறது. 2022 ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் உயரவிருக்கிறது. எவ்வளவு உயரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு மதிப்பீடுகள் கூறுகின்றன. இதுமட்டுமல்லாமல், டிசம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Samayam Tamil 7th pay


அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உள்ளது. அது மேலும் 3 சதவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில் மொத்தம் 34 சதவீதமாக அதிகரிக்கும். கணக்கீடுகளின் படி 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 31.81 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் 32.33 சதவீதமாகவும், செப்டம்பர் மாதத்தில் 32.81 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. சமீபத்தில்தான் சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதற்குள் மீண்டும் ஒரு சம்பள உயர்வு கிடைப்பது அரசு ஊழியர்களைக் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பென்சன் தொகை உயர்வு.. அதுவும் இந்த மாதமே.. ஹேப்பி நியூஸ்!
சென்ற அக்டோபர் 21ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், நடைமுறையில் இருந்த 28 சதவீத அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.9,488.70 கோடி வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ரூ.5,580 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்