ஆப்நகரம்

பழைய பென்சன் திட்டம்.. அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு!

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்.

Samayam Tamil 22 Mar 2022, 12:20 pm

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
Samayam Tamil govt employees


இது மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தியாக இருந்தாலும், 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி நிலுவை தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஹோலிக்கும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வரவில்லை. இதுமட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தேசிய பென்சன் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பென்சன் பணத்துக்கு ஆபத்தா? மத்திய அரசு பதில்!undefined

undefinedஇதுபோக அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அனுமதிக்கக்கூடாது எனவும் மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இதன்படி, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது, எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருப்பதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்