ஆப்நகரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை.. உடனே இதை பண்ணிடுங்க!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை.

Samayam Tamil 27 Apr 2022, 2:53 pm
இலவச ரேஷன் பொருட்களை பெறும் தகுதியில்லா நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் எனவும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Samayam Tamil central govt says ineligible ration cardholders receiving free benefits should surrender their cards
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை.. உடனே இதை பண்ணிடுங்க!


​இலவச ரேஷன் பொருட்கள்

கொரோனா கொள்ளை நோய் பாதிப்பு தொடங்கியபோது நோய் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கியது மத்திய அரசு.

​தகுதியில்லா நபர்கள்

இந்நிலையில், தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருவதாக மத்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தகுதியில்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக செல்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

​எச்சரிக்கை

தகுதியில்லாத நபர்கள் உடனடியாக தங்கள் ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியில்லாத நபர்கள் ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

​ரேஷன் கார்டு

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே இந்த ரேஷன் கார்டு வழங்கப்படும்.

​யாரெல்லாம் ரேஷன் கார்டு சரண்டர் செய்ய வேண்டும்?

100 சதுர சிட்க்கு மேல் நிலம், வீடு, ஃபிளாட், கார், டிராக்டர் வைத்திருப்போர், கிராமங்களில் 2 லட்சம் ரூபாய்க்கு மேலும், நகரங்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மேலும் வருமானம் ஈட்டுவோர் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்