ஆப்நகரம்

Sales ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு வரியா? முக்கிய தீர்ப்பு!

விற்பனை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு சேவை வரி விதிக்க முடியாது என மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 Apr 2023, 5:53 pm
விற்பனையை அதிகரிப்பதற்காக விற்பனை ஊழியர்களுக்கு (Sales employees) வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு (Incentives) சேவை வரி (Service tax) விதிக்கக்கூடாது என்று சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (CESTAT) தீர்ப்பு அளித்துள்ளது.
Samayam Tamil incentives
incentives


பல்வேறு நிறுவனங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக தங்களது மார்க்கெட்டிங் அணி ஊழியர்கள், விற்பனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை (Incentives) வழங்கி வருகின்றன. இந்த ஊக்கத்தொகைக்கு சேவை வரி விதிக்கலாமா என சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் மத்திய கலால் வரி ஆணையருக்கும், டிடி மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், விற்பனை இலக்கை எட்டுவதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை கமிஷனாக கருதி சேவை வரி விதிக்கலாமா என விளக்கம் கோரப்பட்டது.

இவ்விவகாரத்தில் 2017ஆம் ஆண்டிலேயே, விற்பனை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு சேவை வரி விதிக்க வேண்டும் என மத்திய கலால் வரி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துதான் சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையின்போது விற்பனை இலக்கை எட்டுவதற்காக விற்பனை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு சேவை வரி விதிக்கக்கூடாது என தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. மேலும், இவ்விவகாரத்தில் 2017ஆம் ஆண்டில் மத்திய கலால் வரி ஆணையர் பிறப்பித்த உத்தரவையும் தீர்ப்பாயம் ரத்து செய்தது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்