ஆப்நகரம்

1,300 ரூபாய்க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்! சூப்பர் சலுகை!!

ஹீரோ எலெக்ட்ரிக் ஃபிளாஸ் ஸ்கூட்டரை நீங்கள் 1,344 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தி வாங்கலாம்...

Samayam Tamil 23 Nov 2021, 2:02 pm
இந்தியாவில் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறையப் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்த விலை, சிறந்த தரம், அதிக மைலேஜ் போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதற்கு ஏற்றாற்போல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றன.
Samayam Tamil hero


எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் கையில் பணம் இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் குறைந்த ஈஎம்ஐ செலுத்தி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஃபிளாஸ் ஸ்கூட்டரின் சந்தை விலை ரூ.46,640. இதற்கு உங்களுக்கு ரூ.42,000 வரையில் கடன் கிடைக்கிறது. இதை வாங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் 1,344 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தினால் போதும். மொத்தம் 36 மாதங்கள் செலுத்த வேண்டும். முன்பணமாக ரூ.8,958 செலுத்தி இந்த ஸ்கூட்டரை நீங்கள் வாங்கிச் செல்லலாம். வட்டியுடன் சேர்த்து மொத்தம் நீங்கள் செலுத்தும் தொகை ரூ.57,306. இதற்கான வட்டி 10 சதவீதம்.

499 ரூபாய்க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்! சூப்பர் ஆஃபர்!!
இதுபோல சமீபத்தில்தான் பூம் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக கார்பெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இதேபோல ஈஎம்ஐ சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஆரம்ப விலை ரூ.89,999. ஆனால் நீங்கள் முன்பணமாக ரூ.499 செலுத்தினாலே போதும். வண்டியை வாங்கிச் செல்லலாம். அடுத்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் 1,699 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தினால் போதும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்