ஆப்நகரம்

கார் வாங்க சூப்பர் வாய்ப்பு... வெறும் 1.55 லட்சத்துக்கு ஐ10 கார்!

ஹூண்டாய் ஐ10 காரை வெறும் 1.55 லட்ச ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு வந்துள்ளது.

Samayam Tamil 26 Oct 2021, 6:39 pm
கொரோனா வந்த பிறகு பொதுமக்கள் அனைவரும் முடிந்த வரையில் சொந்த பைக், காரிலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர். சொந்தமாக ஒரு காரோ அல்லது பைக்கோ இருந்தால் அது போக்குவரத்து வசதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா பரவல், சமூக இடைவெளி போன்ற பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். ஆனால், தற்போதைய நெருக்கடியான சூழலில் நிறைய பணம் செலவு செய்து கார் வாங்குவது சிரமமான ஒன்றுதான்.
Samayam Tamil car


இதுபோன்ற சூழலில் குறைந்த விலைக்கு ஒரு கார் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இப்போது வந்துள்ளது. வெறும் 1.55 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் ஹூண்டாய் ஐ10 காரை வாங்கலாம். இது second hand கார்தான். ஆனாலும், இவ்வளவு குறைந்த விலைக்குக் கிடைப்பது அரிதான விஷயம். கையில் பெரிய தொகை இல்லாமல் உடனடியாகக் கார் வாங்க நினைப்பவர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி கார் வாங்கலாம். CARS24 வெப்சைட்டில்தான் இந்தச் சலுகை உங்களுக்குக் கிடைக்கிறது.

கார் வாங்க ஆசையா? இதை பார்த்து வாங்குங்க! வட்டி - ஈஎம்ஐ கம்மி!
இந்த காரை வாங்குவதற்கு முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஈஎம்ஐ வசதியிலேயே நீங்கள் வாங்க முடியும். இதன் சந்தை விலை ரூ.4.97 லட்சம் முதல் ரூ.7.59 லட்சம் வரை உள்ளது. அது ரூ.1.55 லட்சத்துக்கு உங்களுக்குக் கிடைக்கிறது. இது 2010 மாடல் கார். வாகனப் பதிவு DL-4C. இதுவரையில் மொத்தம் 90,883 கிலோ மீட்டர் ஓடியுள்ளது. இந்த காருக்கு 12 மாத வாரண்டியும் வழங்கப்படுகிறது. கார் விற்பனையாளரிடம் பேசி இன்னும் குறைந்த விலைக்குக் கூட நீங்கள் வாங்க முடியும். இது போன்ற வாகனங்களை வாங்குவதற்கு முன்னர் மற்ற தளங்களிலும் இதே நிலையில் உள்ள கார்களின் சந்தை விலை நிலவரம் போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்