ஆப்நகரம்

மீன் வளர்க்க மானியம் தரும் அரசு.. பணம் சம்பாதிக்க சூப்பர் வழி!

கிராமப்புறங்களில் வேலை தேடி அலைவோர் அரசின் உதவியுடன் இந்தத் தொழிலைச் செய்யலாம். வருமானமும் அதிகம்.

Samayam Tamil 5 Oct 2022, 2:09 pm
மீன் வளர்ப்பும் தற்போது கிராமப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகிவிட்டது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் மீனவர்கள் தவிர விவசாயிகளின் வருமானமும் இந்த தொழிலின் மூலம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மீன் உற்பத்தி செய்வதன் மூலம் சர்வதேச சந்தையின் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மீன் வளர்ப்பு செலவைக் குறைக்க, விவசாயிகள், மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசாங்கம் மானியம் (Subsidy on Fish Farming) வழங்குகிறது.
Samayam Tamil fish farming


இதற்காகவே பிரதான் மந்திரி மத்ஸய சம்பதா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகளும் வெவ்வேறு வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. மீன் வளர்ப்புக்கு பீகார் அரசு விவசாயிகளுக்கு 75% வரை மானியம் வழங்குகிறது. இதற்காக விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களிடம் மாநில அரசு விண்ணப்பங்களையும் கோரியுள்ளது.

ரேஷன் கார்டில் இலவச உணவு.. அரசுக்கு இவ்வளவு சுமையா?
ஏரிகளில் மீன் வளர்க்கும் தொழில் பீகார் அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. இதன் கீழ், மாநில விவசாயிகளுக்கு ஒரு யூனிட் விலை 10 லட்சத்து 50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மதிப்பீட்டின்படி, ஏரி போன்ற நீர் ஆதாரங்களில் மீன் வளர்ப்புக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா? இது இல்லாமல் இனி எடுக்க முடியாது!
இதன் மூலம் விவசாயிகள் குறைந்த செலவில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து மீன்களின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும். இத்திட்டத்தின் மூலம், மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மீன் வளர்ப்பவர்களின் வருமானமும் அதிகரிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்