ஆப்நகரம்

விமானத்தில் பறக்க சூப்பர் வாய்ப்பு.. டிக்கெட் கட்டணம் குறைப்பு!

கோடைகால சலுகையை முன்னிட்டு விமானக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 21 Apr 2022, 11:50 am
நிறையப் பேருக்கு விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதில் செலவு அதிகம் என்பதால் அந்த ஆசையை விட்டு விடுவார்கள். சிலர் ஒருமுறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டால் விமானப் பயணம் செய்யலாம் அல்லவா?
Samayam Tamil vistara


அப்படி ஒரு சலுகை விஸ்தாரா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே நீங்கள் விமானத்தில் எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், உடனடியாக டிக்கெட்டை புக்கிங் செய்யுங்கள். விஸ்தாரா விமான நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் கோடைகால சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் வணிக வகுப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

விஸ்தாரா நிறுவனத்தின் இந்த சலுகை இன்று (ஏப்ரல் 21) இரவு 21.59 மணி வரை மட்டுமே இருக்கும். இந்த சலுகையில் எகானமி வகுப்பிற்கு ரூ.2,499, பிரீமியம் வகுப்பிற்கு ரூ.3,459 மற்றும் வணிக வகுப்பிற்கு ரூ.9,999 என டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விமான டிக்கெட் விலை உயருமா? அச்சத்தில் பயணிகள்!
ஆனால், சர்வதேச விமானப் பயணங்களுக்கான முன்பதிவு காலம் ஏப்ரல் 25 வரை இருக்கிறது. சர்வதேச விமானங்களுக்கு எகானமி வகுப்பில் ரூ.12,999, பிரீமியம் எகானமி ரூ.17,249 மற்றும் வணிக வகுப்பிற்கு ரூ.35,549 என கட்டணம் உள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி வரை இரவு 23.59 வரை முன்பதிவு செய்யலாம்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான இந்த கட்டணம் ஒரு வழி கட்டணம் மட்டுமே. ரிட்டன் பயணத்துக்கு தனியாக கட்டணம் இருக்கும். டெல்லி, மும்பை மற்றும் உதய்பூரில் இருந்து டேராடூன், சண்டிகர், லக்னோ, அமிர்தசரஸ், லே, ஸ்ரீநகர், வாரணாசி, கோவா, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் இச்சலுகை கிடைக்கும்.

விமான டிக்கெட் குறைய போகுது.. கம்மி ரேட்டில் பறக்கலாம்!
அதேபோல, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து காத்மாண்டு, கொழும்பு, டாக்கா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற சர்வதேச வழித்தடங்களுக்கும் முன்பதிவு செய்யலாம். இந்த வழித்தடங்களில் ஜூன் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயணம் செய்யலாம்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்