ஆப்நகரம்

சிலிண்டர் புக் பண்ணுனா தங்கம் கிடைக்கும்! அட்டகாசமான ஆஃபர்!

சமையல் சிலிண்டர் புக்கிங் செய்து ரூ.10,000 மதிப்புள்ள தங்கம் வெல்ல வாய்ப்பு வந்துள்ளது.

Samayam Tamil 14 Oct 2021, 3:17 pm
சிலிண்டர் விலை உயர்வு என்பது இப்போது பெரும் பிரச்சினையாக உள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மீண்டும் விறகு அடுப்புக்கே சென்றுவிடலாமா என்ற மனநிலைக்கு நிறையப் பேர் வந்துவிட்டனர். அந்த அளவுக்கு சிலிண்டர் விலை உயர்வு மக்களை வாட்டுகிறது. இதுபோன்ற சூழலில் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் விலை மதிப்பு மிக்க தங்கம் கிடைத்தால்!
Samayam Tamil lpg


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இந்த சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் சிலிண்டர் புக்கிங் செய்து வாங்கினால் ரூ.10,000 வரையில் தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. பேடிஎம் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். அதுவும் இது குறிப்பிட்ட காலம் மட்டுமே. அதாவது அக்டோபர் 7 முதல் அக்டோபர் 16 வரையில் மட்டுமே இச்சலுகைத் திட்டம் நடைமுறையில் இருக்கும். சலுகை முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.

Gold rate: இன்னைக்கு நகை வாங்காதீங்க! பெரிய விலையேற்றம்!

நவராத்திரி கோல்டு ஆஃபர் என்ற இத்திட்டத்தில் தினமும் 5 லக்கி வின்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10,001 மதிப்புள்ள 24 கேரட் தங்கம் வழங்கப்படும். இச்சலுகையைப் பெறுவதற்கு பேடிஎம் ஆப் ஓப்பன் செய்து அதில் உள்ள ‘Book gas cylinder' என்ற வசதியில் செல்ல வேண்டும். அடுத்ததாக நீங்கள் கேஸ் வாங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து சிலிண்டர் ஐடி, நுகர்வோர் எண்ணைப் பதிவிட வேண்டும். இதுமட்டுமல்லாமல் 1000 ரூபாய் வரையில் கேஷ் பேக் தரும் சலுகைகளும் பேடிஎம் ஆப்பில் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்