ஆப்நகரம்

வீடு கட்ட, வண்டி வாங்க நல்ல நேரம்! அதிரடி அறிவிப்பு!

வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Oct 2021, 3:40 pm
தசரா, தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய பண்டிகை சீசனில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கலாம். வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil BOI


புதிய வட்டி விகிதம் அக்டோபர் 18 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், 2021 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி விகிதம் 0.35 சதவீதமும், வாகனக் கடன் வட்டி விகிதம் 0.50 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.85 சதவீதத்துக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் வீட்டுக் கடனுக்கு 6.85 சதவீத வட்டியும், வாகனக் கடனுக்கு 7.35 சதவீத வட்டியும் நடைமுறையில் இருந்தது.

வீட்டு லோன், கார் லோன்... பண்டிகை சீசன் சலுகை!
வட்டி விகிதம் குறைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இவற்றுக்கான செயல்பாட்டுக் கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வட்டி விகிதக் குறைப்பை அறிவிப்பது இது முதல் முறையல்ல. பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு முன்னரே இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளும் அரசு வங்கிகளும் வட்டிக் குறைப்பை அறிவித்திருந்தன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாகக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்