ஆப்நகரம்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய்... இதெல்லாம் சரியா இல்லைனா கிடைக்காது!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 27 Jul 2021, 7:21 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் எட்டு தவணைகளாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படுகிறது. ஆனால் சில விவசாயிகளுக்கு நிதியுதவி வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கு விவசாயிகள் வழங்கிய தவறான விவரங்கள் மற்றும் ஆவணங்கள் காரணமாக இருக்கலாம்.
Samayam Tamil pm kisan


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - ஜூலையில் முதல் தவணையும், ஆகஸ்ட் - நவம்பரில் இரண்டாம் தவணையும், டிசம்பர் - மார்ச்சில் மூன்றாம் தவணையும் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தவணைப் பணம் சரியாக வந்துசேராவிட்டால் அவர்கள் வழங்கிய விவரங்கள் தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. உடனே அவற்றை சரிபார்க்க வேண்டும். ஏதேனும் பிழை இருந்தால் அதை திருத்தம் செய்ய வேண்டும்.

நகை வாங்குவோருக்கு இனிப்பான செய்தி!
விவசாயியின் பெயர், வயது மற்றும் பிரிவு முக்கியமான ஒன்றாகும். அதன் பின்னர் ஆதார் எண் அவசியம். அஸ்ஸாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஆதார் கார்டுக்குப் பதிலாக டிரைவிங் லைசன்ஸ், வோட்டர் ஐடி, 100 நாள் வேலைத் திட்ட அட்டை போன்றவை ஏற்கப்படும். வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC code முக்கியமாகும். மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒருவேளை முதலில் கொடுத்த மொபைல் நம்பரை மாற்றியிருந்தால் அதை அப்டேட் செய்ய வேண்டும். அப்போதுதான் பணம் தொடர்பான விவரங்கள் பயனாளிக்கு சரியாக வந்துசேரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்