ஆப்நகரம்

குடும்ப பென்சன் வாங்க இதெல்லாம் அவசியம்!

குடும்ப பென்சன் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்று பார்க்கலாம்.

Samayam Tamil 28 Jun 2021, 8:30 pm
கொரோனா சமயத்தில் பென்சன் வாங்குவோர் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கும் வகையில் பென்சன் விதிமுறைகளில் முக்கியமான திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டது. பென்சன் பணத்தை வங்கிகள் விரைந்து வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. குடும்ப பென்சன் வாங்குபவர்கள் அதற்கு விண்ணப்பித்தவுடன் அவர்களுக்கான பென்சன் தொகை விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது பென்சன் வாங்குவோர் நிம்மதியடைந்தனர்.
Samayam Tamil pension


ஆனாலும் குடும்ப பென்சனுக்கு முதலில் விண்ணப்பிக்கும்போது நிறைய ஆவணங்கள் கேட்கப்படுகிறது. அதேபோல, அதைச் செயல்படுத்துவதற்கும் கால தாமதம் ஆகிறது. ஆவணங்களைப் பொறுத்தவரையில், பயனாளி இறந்தவுடன் அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப பென்சன் கிடைக்க சம்பந்தப்பட்டவரின் இறப்புச் சான்றிதழ் அவசியமானதாகும்.

பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000 கிடைக்கும்!
மரணமடைந்த பயனாளிக்கும் அவரது வாழ்க்கைத் துணைக்கும் ஒரே இணைப்புக் கணக்காக இருந்தால் குடும்ப பென்சன் பெறத் தொடங்குவதற்கான விண்ணப்பப் படிவம் அவசியம். இறப்புச் சான்றிதழ், வயதுச் சான்று, பிறப்புச் சான்றிதழ் ஆகியவை அவசியம். ஆனால் படிவம் 14 (form-14) வங்கியிடம் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

மரணமடைந்தவருக்கும் அவரது வாழ்க்கைத் துணைக்கும் ஒரே இணைப்புக் கணக்கு இல்லாவிட்டால் மேற்கூறிய ஆவணங்களுடன் form 14 கட்டாயமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்