ஆப்நகரம்

உங்க பான் கார்டு ஆதாருடன் லிங்க் ஆகியிருக்கா? செக் பண்றது ஈசி!

பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று நீங்களே ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

Samayam Tamil 23 Jun 2021, 7:26 pm
பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் தனிநபரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே உள்ளது. கால அவகாசம் முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் பலர் இவற்றை இணைக்காமலேயே இருக்கின்றனர்.
Samayam Tamil pan card


ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் கார்டை இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்துவிடும் என்பதோடு வருமான வரிச் சட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வரையில் அபராதமும் விதிக்கப்படும். இவற்றை இணைக்காவிட்டால் வங்கிச் சேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இவற்றை இணைக்காத பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என வருமான வரித் துறை தரப்பிலிருந்து நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பலருக்கு தங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். ஏனெனில் வங்கிகளிலேயே இவை பெரும்பாலான சமயங்களில் இணைக்கப்பட்டுவிடும். பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம்.

ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பதற்கு https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். இந்த முகவரியில் சென்று பான் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவிட்டாலே போதும்.

ஒருவேளை இவை இணைக்கப்படாமல் இருந்தால் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற முகவரியில் சென்று பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிடலாம். உடனே செக் பண்ணி பாருங்க... இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு...

அடுத்த செய்தி

டிரெண்டிங்